சைபன் பாலம் பகுதியில் வெள்ள பெருக்கு

சைபன் பாலம் பகுதியில் வெள்ள பெருக்கு
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள முக்கடல் அணை உள்ளிட்ட அணைகளுக்கும் அதைப்போல் மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.இந்நிலையில்மேற்கு தொடர்ச்சி மலை கிராமத்தையொட்டி அமைந்துள்ள தடிக்காரண்கோணம் சைபன் பகுதியில் உள்ள தோவாளை சானல் செல்லும் மேம்பாலத்தின் தூண்கள் பாதுகாக்கவும், மண் அரிப்பு ஏற்படாமல் இருக்கவும் அதைப்போல் நீரை சேமிக்கவும் கட்டபட்ட தடுபணை காட்டாற்று வெள்ளத்தில் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் அதில் இருந்து வெள்ளம் வெளியேறி வருகிறது. அந்த கால்வாயின் அருகே குடியிருப்புகளும் உள்ளன. இந்த மழை தொடர்ந்து பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளார்கள்.
Next Story