கோடை கால அறிவியல் பயிற்சி நிறைவு விழா: அமைச்சர் பி.கீதா ஜீவன் பங்கேற்பு

X
தூத்துக்குடியில் கோடை கால அறிவியல் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் மாணவ, மாணவியர்களுக்கு அமைச்சர் பி.கீதா ஜீவன் சான்றிதழ்கள் வழங்கினார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் அமைந்துள்ள அறிவியல் பூங்காவில் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து பள்ளி மாணவர்களின் கோடை கால விடுமுறையை பயனுள்ள அறிவுப்பயணமாக மாற்றும் நோக்கத்தில், 'ஏனென்று கேள்' எனும் தலைப்பில் 23 நாட்கள் நடைபெற்ற கோடை கால அறிவியல் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ. ஜெகன், ஆணையாளர் லி.மதுபாலன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் முனைவர் ஆர்.சாந்தகுமாரி, மாமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

