புளியங்குடி அருகே விஷம் குடித்து மாணவா் தற்கொலை

X
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெல்கட்டும்செவல் மேலத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன். அவரது மகன் ரோகித் (18), தென்காசி அருகே உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு ரோகித் வீட்டில் தனியாக இருந்தபோது, விஷம் குடித்து மயங்கி கிடந்தாராம். அவரை அருகே இருந்தவா்கள் மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் . இதுகுறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
Next Story

