கோவை: பிரபல உணவகத்தில் பல்லி கிடந்த உணவு !

பிரபல கோவை பிரியாணி உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு பரிமாறப்பட்ட பிரியாணி குழம்பில் இறந்த நிலையில் பல்லி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பிரபல கோவை பிரியாணி உணவகத்தில் நேற்று மதியம் வாடிக்கையாளர் ஒருவருக்கு பரிமாறப்பட்ட பிரியாணி குழம்பில் இறந்த நிலையில் பல்லி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு பவானியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் தனது நண்பர்களுடன் மதிய உணவுக்காக அங்கு சென்றபோது இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பல்லி கிடந்ததை உணவக ஊழியர்களிடம் தெரிவித்தபோது, அவர்கள் அலட்சியமாகப் பல்லியை அகற்ற முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்த தகவல் மற்ற வாடிக்கையாளர்களுக்குத் தெரியவந்ததும், அங்கு உணவு அருந்திக் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத் துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். கோவையில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் உணவு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story