நுள்ளிவிளையில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும்

X
கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இரட்டை ரயில் பாதை பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. குளச்சல் சட்டமன்ற தொகுதியின் மக்கள் நெருக்கம் மிகுந்த முக்கிய இடமான நுள்ளி விளையில் நிலையம் அமைந்தால் பயணிகளுக்கு மிக வசதியாக இருக்கும். இதன் அருகில் உள்ள ஆளூர் மற்றும் இரணியல் ரயில் நிலையங்களுக்கு போக்குவரத்து வசதி நுள்ளிவிளையை போல் இல்லை. இந்த சாலையில் 24 மணி நேரமும் அரசு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வில்லுக்குறியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திலும், கொன்னக்குழிவிளை, வடக்கு நுள்ளிவிளை நான்கு வழிச்சாலை மற்றும் தோட்டியோடு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்திலும் நுள்ளிவிளை ரயில் பாதை அமைந்துள்ளது. இங்கு ரயில் நிலையம் அமைந்தால் இந்த சாலைகள் வழியாக செல்பவர்கள் அனைவரும் பயன்படுத்த வசதியாக இருக்கும். எனவே கூடுதல் தண்டவாளங்கள் அமைத்து நுள்ளிவிளையில் ரயில் நிலையம் அமைக்க ரயில்வே வாரியம் முன் வர வேண்டும். இதற்கு எம்பி, எம்எல்ஏ உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் ரயில்வே வாரியத்திற்கு உரிய அழுத்தங்களை தர வேண்டும் என ரயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story

