கோவை: ரித்தீஷ், ஆகாஷ் வெளிநாடு பயணம் ஏன்? - நயினார் கேள்வி

கோவை: ரித்தீஷ், ஆகாஷ் வெளிநாடு பயணம் ஏன்? -  நயினார் கேள்வி
X
முதலமைச்சருக்கு அமலாக்கத்துறை (ED) பயம் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சருக்கு அமலாக்கத்துறை (ED) பயம் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அப்படியொரு பயம் இல்லையென்றால், டாஸ்மாக் ஊழல் வழக்கில் தொடர்புடைய ரித்தீஷ் மற்றும் ஆகாஷ் ஆகியோர் ஏன் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார். கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், டாஸ்மாக் ஊழல் குறித்துப் பேசுகையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் அமலாக்கத்துறை தலையிட இடைக்காலத் தடை விதித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், துணை முதலமைச்சரின் நண்பர்களான ரித்தீஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரை விசாரித்தால் உண்மை வெளிவரும் என்று அமலாக்கத்துறை ஏற்கெனவே கூறியிருந்தது. ஆனால், இருவரும் லண்டனுக்குச் சென்றுவிட்டதாகவும், சிலர் தலைமறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாங்கள் ED-க்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம்" என்று கூறியது குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், 2011 தேர்தல் நடந்தபோது ஏற்பட்ட கூட்டணி பேச்சுவார்த்தையின் பின்னணியில் இ.டி. பயம் இருந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பினார்.
Next Story