திருப்பத்தூரில் நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து! தள்ளிச்சென்ற பயணிகள்!

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து! தள்ளிச்சென்ற பயணிகள்! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் விழுப்புரம் கோட்ட பணிமனையில் இருந்து பேருந்து ஓட்டுனர் திருவண்ணாமலைக்கு அரசு பேருந்து எடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு பேருந்து கிளர்ச்சி ஏர் லாக் பழுத்தின் காரணமாக திருப்பத்தூர் நகர காவல் நிலையம் முன்பு திருப்பத்தூர் வழியாக கிருஷ்ணகிரி செல்லும் பிரதான சாலையில் திடீரென நின்றது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கீழே இறங்கி பேருந்தை தள்ளி அவல நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பயணிகள் அவதி உற்றனர். மேலும் நடு வழியில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story

