திருப்பத்தூர் அருகே மதுபான கடை ஊழியரை கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்கள் இருவர் கைது

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே கடனாக மதுபானம் கேட்டு தர மறுத்ததால் டாஸ்மாக் ஊழியர்களை பெட்ரோல் குண்டு போட்டுவிடுவேன் என மிரட்டிய இரு வாலிபர்கள் கைது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கண்ணால பட்டி பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் மகன் கோபி (28) கவுண்டப்பனூர் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகள் சதீஷ்குமார்(27) நேற்று இரவு காக்கங்கரை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் மது அருந்த இருவரும் சென்று உள்ளனர். அப்போ அளவுக்கு அதிகமான போதையில் இருந்த இருவரும் மதுபானத்தை கடனாக கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கோபி மற்றும் சதீஷ்குமார் உள்ளிட்ட இருவரும் சேர்ந்து மதுபான கடையில் வேலை செய்யும் ஊழியர்களிடம் எனக்கு கடனாக மதுபானம் கொடு என வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆபாச வார்த்தைகளால் டாஸ்மார்க் ஊழியர்களை திட்டியும் உள்ளனர் மேலும் மதுபானம் கொடுக்கவில்லை என்றால் பெட்ரோல் குண்டு போட்டு விடுவேன் என இருவரும் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மதுபான கடையின் விற்பனையாளர் சிவானந்தம் கொடுத்த கொடுத்த புகாரின் பேரில் கோபி மற்றும் சதிஷ்குமார் இருவரையும் கந்திலி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆசை படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இரு வாலிபர்கள் கடனாக மதுபானம் கேட்டு பெட்ரோல் குண்டு போட்டு விடுவேன் மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story

