திருப்பத்தூரில் சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தால் தொடரும் விபத்து பொதுமக்கள் அவதி.

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 15 வது வார்டு பகுதியில் சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தால் தொடரும் விபத்துகளால் பொதுமக்கள் அவதி. மின் கம்பத்தை சாலை ஓரமாக மாற்றி அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு வள்ளுவர் நகர் நியாய விலை கடை அருகே உள்ள 66 எண் கொண்ட மின் கம்பம் பல ஆண்டுகளாக சாலையின் நடுவில் இருப்பதால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் மாணவ மாணவிகள் முக்கிய சாலையின் வளைவில் சாலை நடுவே இருக்கும் மின் கம்பம் இருப்பது தெரியாமல் சட்டென மின்கம்பத்தில் மோதி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். இந்நிலையில் அந்த மின் கம்பத்தை மாற்றி சாலையின் ஓரமாக அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட மின் அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தும் பல ஆண்டுகளாக அதை கவனத்தில் கொள்ளாமல் அப்படியே விட்டு வைத்துள்ளனர். தற்பொழுது அந்த சாலை புதுப்பிக்கப்பட்டு புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்ற போதும் கூட அந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தாமல் அப்படியே சாலை நடுவே விட்டுவிட்டு தார் சாலை அமைத்துள்ளனர். அதுமட்டுமின்றி மின் கம்பத்தில் இரும்பு கம்பிகள் பாதுகாப்பு இல்லாமல் அப்படியே சுற்றி வளைத்து சிறுவர்களின் கைக்கு எட்டும் தூரத்தில் விட்டு வைத்திருப்பதால் மின்சாரம் தாக்கி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய அபாயமும் இருப்பதால் உடனடியாக மின்சார துறை அலுவலர்கள் அந்த கம்பத்தை மாற்றி சாலையோரமாக அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Next Story

