ஜோலார்பேட்டை அருகே மின் கம்பத்தை ஆக்கிரமித்த பேக்கரி கடையில் திடீர் தீ
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மின் கம்பத்தை ஆக்கிரமித்த பேக்கரி கடையில் திடீர் தீ ஜோலார்பேட்டை எஸ். கோடியூர் பகுதி போலீஸ் ஸ்டேஷன் ரோடு செல்லும் சாலையில் உள்ள பேக்கரி கடையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பி டித்தது. இதனால்கடையில் இருந்த வாடிக்கையாளர் கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்வா ரிய அலுவலர்கள் மூலம் மின் சப்ளை துண்டிக் கப்பட்டது. இதன் மூலம் பெரும் தீ விபத்து தவிர்க் கப்பட்டது. பின்னர் மின் இணைப்பை சீரமைக்க மின் ஊழியர்கள் மின்கம் பத்திடம் வந்தபோது, மின் கம்பத்தை ஆக்கிரமித்து கடையினுள் சேர்த்து கட் டப்பட்டிருந்ததால் மின் கம்பம் ஏறுவதற்கான வழி கடையின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் இதுகு றித்து மின்வாரிய அலுவல கத்தில் அதிகாரியிடம் கேட்டதற்கு சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு மின் கம்பம் தனியாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தி அகற்றாததால்துறை அலுவ லர்களுக்கு புகார் தெரிவிக் கப்பட்டுள்ளது. மின்கம்பத்தில் இருந்து பல்வேறு குடியிருப்பு களுக்கு மின் இணைப்பு செல்வதால் மின் குறை பாட்டை சீரமைக்க மின் கம்பம் தனியாக தெரியும் படி இருக்க அறிவுறுத்தியும் கண்டுகொள்ளாமல் உள் ளதால் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story



