சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய தவெக வினர்

X
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தமிழக வெற்றி கழகம் சார்பில் சுற்றுலா தலமான கன்னியாகுமரி,மகாதானபுரம், சாமிதோப்பு ,அஞ்சுகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கினர். ஒன்றிய தலைவர் எட்வின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராகுல் அருள், நோபிள், லெலின், ஜெகன், அருள் விக்னேஷ், ஸ்டாலி, ஜெகன் முத்துலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story

