குளித்தலையில் கரூர் கிழக்கு மாவட்ட விசிக தலைமை அலுவலகம் திறப்பு விழா

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் பங்கேற்று சிறப்புரை
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை கிழக்கு ஒன்றியம் ஆலத்தூரில் உள்ள அத்தி மரத்தான் அருள்மிகு விநாயகர், அருள்மிகு காமாட்சி, அருள்மிகு மீனாட்சி திருக்கோவில் குடமுழுக்கு விழா இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் மற்றும் மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் என்கிற ஆற்றலரசு தலைமையில் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி சிறப்பு வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து குளித்தலையில் கரூர் கிழக்கு மாவட்ட கட்சி அலுவலக திறப்பு விழாவிற்கு வருகை புரிந்து அலுவலகத்தை திறந்து வைத்து, களப்போராளி கோவக்குளம் ராம்குமார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் துவி வீரவணக்கம் செலுத்தினார். அப்போது பேசிய திருமாவளவன், 31 ஆம் தேதி மதச்சார்பின்மையை காப்போம் பேரணியை ஜீன் 14 ஆம் தேதி தள்ளி வைத்திருக்கிறோம். அனைவரும் தீவிரமாக களப்பணி ஆற்றிட வேண்டும், பேரணியில் கரூர் மாவட்டத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான சிறுத்தைகள் பங்கேற்க வேண்டும், பாஜக ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை எதிர்கொள்ள அணிதிரள வேண்டும். நாட்டின் மக்களை பாதுகாப்பதற்கு மதசார்பின்மையை பாதுகாப்பதற்கு கட்சி சார்பற்ற ஜனநாயக சக்திகளும் அந்த பேரணியில் பங்கேற்கலாம் ஒரு அழைப்பாக ஒரு வேண்டுகளாக விடுக்க கடமை பட்டிருக்கிறேன். ஜீன் 14 ஆம் தேதி திருச்சியில் மதச்சார்பின்மையை காப்பதற்க்காக அணிஅணியாய் திரண்டு வாருங்கள் என அழைப்பு விடுத்தார். பொய்யாமணி, வதியம் பகுதியில் கட்சி கொடி ஏற்றி வைத்த எழுச்சித்தமிழர் அங்கிருந்து விடைபெற்று திருச்சி நோக்கி புறப்பட்டார். இந்நிகழ்வில் கரூர் திருச்சி மண்டல செயலாளர் தமிழாதன், மண்டல துணை செயலாளர் பெரியசாமி, குளித்தலை ஒன்றிய செயலாளர் மாயவன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் மகாமுனி, குளித்தலை நகர செயலாளர் பிரகாஸ், தோகைமலை ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், கடவூர் ஒன்றியம் குமணன், கோட்டைமேடு மகாலிங்கம் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், மகளிர் அணியினர் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story