மாணவர்கள் நலன்கருதி நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயங்க வேண்டும்

மாணவர்கள் நலன்கருதி நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயங்க வேண்டும்
X
சேர்வைக்காரன்மடம் பகுதியில் மாணவர்கள் நலன்கருதி நிறுத்தப்பட்ட பேருந்துகளை முறையாக இயங்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேர்வைக்காரன்மடம் பகுதியில் மாணவர்கள் நலன்கருதி நிறுத்தப்பட்ட பேருந்துகளை முறையாக இயங்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு: தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி வழியாக இயக்கப்படும் அரசு பேருந்துகள் 52B பேருந்து தூத்துக்குடி அரசு பணிமனையால் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தடத்தில் இயக்கப்படும். கடந்த வருடம் முதல்வர் ஆணையால் எங்கள் ஊராட்சியின் வழியாக புதிதாக 52A பேருந்து இயக்கப்பட்டது. பொதுமக்கள் மாலையிட்டு வரவேற்றனர். தற்போது 52A புதிய பேருந்தை நிறுத்திவிட்டு தரமில்லாத பாதுகாப்பற்ற பழைய பேருந்தை இயக்கி வருகின்றனர். தொடர்ந்து எம் ஊராட்சி மக்களை வஞ்சித்து வருகின்றனர். மேற்கண்ட 52A மற்றும் 52B போன்ற பேருந்துகள் பள்ளி மாணவர்கள் காலையிலும் மாலையிலும் செல்லும் பிரதான பேருந்து ஆகும். 52A காலை நேரத்தில் 7 மணியளவில் எம் ஊராட்சி வழியாக சாயர்புரம் செல்லும் பேருந்து ஆகும். மாலை 4 மணியளவில் சாயர்புரத்திலிருந்து எம் ஊராட்சி வழியாக தூத்துக்குடி செல்லும். எம் ஊராட்சியில் மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி இல்லாததால் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் காலை நேரங்களில் மார்க்கெட் செல்லும் வியாபாரிகள் இந்த பேருந்துகளில் பயணிக்கின்றனர். அரசு ஆணைப்படி இயக்கப்பட்ட 5 பேருந்துகளான 52 B மற்றும் 52A ஆகிய பேருந்துகளை மாணவர்கள் நலன்கருதி முறையாக இயங்கவேண்டும். எமது பகுதிக்கு அறிவிக்கப்பட்ட பதிய 52 A பேருந்தை திரும்பவும் இயக்கி பழைய தரமில்லாத பழைய பேருந்தை அப்புறப்படுத்த வேண்டும். ஏற்கனவே கடந்த நாட்கள் 52A மற்றும் 52B பேருந்துகளை இயக்க பலமுறை மனு அளித்துள்ளோம். திரும்ப திரும்ப எம் ஊராட்சி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலனுக்கு எதிராக தூத்துக்குடி அரசு பேருந்து பணிமனை நிர்வாகிகள் எம் ஊராட்சி மக்களை அவமதித்து எமது ஊராட்சி பகுதிகளில் உள்ள பேருந்துகளை மாற்றி தரமில்லாத காலாவதியான பேருந்துகளை இயக்கி வருவதை முதல்வர் கவனம் கொண்டு வருகிறோம். மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஊராட்சி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story