வரதப்பிடாரியம்மன் கோவில் தேரோட்டம்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் அமைந்துள்ள, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் துணைக்கோவிலான வரதப்பிடாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 10- தினங்களாக சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று (மே.28)நடைபெற்றது. இதில் வரதப்பட்டாரி அம்மன் கோவிலில் இருந்து பிடாரியம்மன் சிலை கொண்டுவரப்பட்டு திருமறைநாதர் வேதநாயகி அம்மன் திருக்கோவில் சுற்றியுள்ள தேர் வீதியில் வழியாக அம்மன் திருஉலா நடைபெற்றது சுற்றுவட்டார கிராம பகுதிகளை சிறந்த பக்தர்கள் பங்கேற்றுஅம்மனின் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வராதப்பிடாரி அம்மனின் அருளை பெற்று சென்றனர்.
Next Story




