முருக பக்தர் மாநாட்டிற்காக முகூர்த்தக்கால் நடும் விழா
மதுரையில் 'குன்றம் காக்க... கோவிலை காக்க பெயரில் முருக பக்தர்கள் மாநாடு இந்து முன்னணி சார்பில் வரும் ஜூன் 22ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான அடிக்கல் பூமி பூஜை மதுரை வண்டியூரில் இன்று (மே 28) நடந்தது. தொடக்கத்தில் கோ பூஜை நடந்தது. விழாவில் அமைக்கப்பட்ட மாநாடு கட்டமைப்பின் மாதிரியை பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம் பார்வையிட்டு கேட்டறிந்தனர். பின்னர் 6:58 மணிக்கு தொடங்கிய பூமி பூஜையில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,இந்து முன்னணி தலைவர், கேசவ விநாயகம் உள்ளிட்ட முக்கிய பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story




