கரூர்-அகில இந்திய கூடைப்பந்து போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கி வாழ்த்து.
கரூர்-அகில இந்திய கூடைப்பந்து போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கி வாழ்த்து. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் மே 22ஆம் தேதி அகில இந்திய கோடைப்பந்து போட்டி துவங்கியது. இதில் எல் ஆர் ஜி நாயுடு 65 ஆம் ஆண்டு அகில இந்திய ஆண்களுக்கான கூடை பந்து போட்டியும், கேவிபி வங்கி கோப்பைக்கான 11 ஆம் ஆண்டு அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டியும் மே 22ஆம் தேதி துவங்கி மே 27ஆம் தேதி வரை . இறுதி நாளான நேற்று. இரவு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற ஆண்கள் பிரிவில் முதல் நான்கு அணிகளுக்கும், பெண்கள் பிரிவில் முதல் நான்கு அணிகளுக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,மாவட்ட ஆட்சியர் தங்கவேல் , கரூர் வைஸ்யா வங்கி பொது மேலாளர் முரளி ஆகியோர் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசு தொகை மற்றும் கோப்பைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். பரிசுகளை பெற்றுக் கொண்ட வீரர்கள் கரூர் கூடைப்பந்து கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
Next Story





