மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி தாய் எஸ்பி அலுவலகத்தில் புகார்!

X
திருப்பத்தூர் மாவட்டம் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி தாய் மற்றும் உறவினர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார்! நீதி வேண்டும் என கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு* திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த கோபி மற்றும் சுமதி மகன் ரமண்(27) இவர் கடந்த நான்காம் தேதி எம் எம் நகர் பகுதியில் உள்ள அரசு சிறுவர் பூங்காவில் உள்ள இரும்பு கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடையராஜ்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயசீலன், சக்தி ஆகியோர் மீது மாதனூர் காவல் நிலையத்தில் ராமனின் மனைவி நிவேதா என்பவர் புகார் அளித்து உள்ளர். எந்தவொரு நடவடிக்கையும் போலீசார் எடுக்காததால் மாவட்ட எஸ். பி. யிடம் நடவடிக்கை எடுக்க கோரி நான்கு முறை நேரில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் திரும்பவும் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சுமதி மற்றும் அவருடைய உறவினர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு நீதி வேண்டுமென கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு காணப்பட்டது.
Next Story

