தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூடப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையம்... நோயாளிகள் பரிதவிப்பு
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் நிறுவனத்துடன் இணைந்த மருத்துவமனை வளாகத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையம் இயங்கி வந்தது. இங்கு எடுக்கப்படும் எம்.ஆர்.ஐ ஸ்கேன்களுக்கு மினிமம் கட்டணமாக ரூ2500 மட்டும் வசூலிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்தால் இயங்கி வந்த எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையத்தின் ஒப்பந்தகாலம் நிறைவடைந்த நிலையில், கடந்த மாதம் இங்கு ஸ்கேன் எடுக்கும் மையம் மூடப்பட்டது. மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க வேண்டிய நோயாளிகள் தேனியில் சென்று ஸ்கேன் எடுக்க தேனி அரசு மருத்துவமனை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனையில் இருந்து தேனிக்கு செல்ல முடியாமல் நோயாளிகளும் நோயாளிகளின் உறவினர்களும் தவித்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழக அரசே எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையம் அமைக்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். அதே நேரம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஸ்கேன் மையம் தொடங்கும் வரையில், தேனிக்கு சென்று ஸ்கேன் எடுக்க நோயாளிகளுக்கு இலவச வாகன வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story



