கனமழையால் வறண்டு காணப்பட்ட மூலவைகை ஆற்றில் நீர்வரத்து விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி

மூல வைகை
தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் முழுவதும் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கடந்த சில மாதங்களாக வறண்டு மணல்மேடாக காட்சி அளித்த வைகை ஆற்றில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. கோடை காலத்தில் தொடங்கியுள்ள இந்த நீர்வரத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த நீர் வரத்து காரணமாக வைகை ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான விவசாய கிணறுகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து உள்ளது. வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள நீர்வரத்து காரணமாக வைகை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான வருஷநாடு சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அடியோடு நீங்கி உள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. இதனால் பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story