மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த குடும்பத்திற்கு அதிமுக சார்பில் நிதி உதவி...

X
Rasipuram King 24x7 |28 May 2025 7:12 PM ISTமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த குடும்பத்திற்கு அதிமுக சார்பில் நிதி உதவி...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியம் அனந்தகவுண்டம்பாளையம் கிராமத்தில் கொல்லங்காடு பகுதியில் வசிக்கும் செங்கோடன்(80) பெருமாயி(72) வயதான தம்பதியின் வீடு தொடர்சியாக பெய்த மழையின் காரணமாக வீட்டின் சுவர் கடந்த வாரம் இரவு (20/05/2025) முற்றிலும் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. இந்த சம்பவம் அறிந்து அதிமுக முன்னாள் அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா அவர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு அவர்களுக்கு நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார் அப்போது அவருடன் வெண்ணந்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜா, அனந்த கவுண்டம்பாளையம் கிளைக் கழக செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்..
Next Story
