ஒத்த கருத்துடையவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக உள்ளது, விஜய்க்கு அழைப்பு விடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் சிவகாசியில் பேட்டி..

X
ஒத்த கருத்துடையவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக உள்ளது, விஜய்க்கு அழைப்பு விடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் சிவகாசியில் பேட்டி... சிவகாசியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார், தற்போது பாஜக, அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் தமிழகத்தில் முதல் அணியாகவும், வெற்றி அணியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது தமிழகத்திற்கு தேவையான நல்லாட்சிக்கு ஒத்த கருத்துடையவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக உள்ளது-விஜய் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதில் மூன்று முறை நிதி ஆயோக் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் சொல்லவில்லை தமிழகத்தின் நிதி தேவையை பூர்த்தி செய்யக்கூடிய முக்கியமான கூட்டத்திற்கு தமிழக முதல்வர் செல்லவில்லை இந்தியாவின் 99 சதவீத முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது மாநிலத்தின் வளர்ச்சிக்காக நிதி தேவை குறித்து பேசுகின்ற ஒரு சூழலை மத்திய அரசு ஏற்படுத்தும் போது நிதி வேண்டும் என எதிர்பார்க்கும் தமிழக அரசு ஏன் மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை அலட்சியப்படுத்தி புறக்கணித்தது என்பது மக்களுடைய கேள்வியாக உள்ளது இந்த முறை முதல்வர் நிதி அயோக் கூட்டத்திற்கு சென்றது, அரசியல் கண்ணோட்டம், தேர்தல் கண்ணோட்டம், வாக்கு வங்கி கண்ணோட்டம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது ரிசர்வ் வங்கி நகை கடன் நிபந்தனைகள் வளர்க்க வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தியுள்ளேன், சாதாரண மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் ரிசர்வ் வங்கி முடிவெடுக்கும் என நம்புகிறேன் மாநிலங்களவையில் சீட் கோரப்படுமா? என்ற கேள்விக்கு உரிய கட்சிகள் யார் வேட்பாளர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் சட்டமன்ற தேர்தலில் எத்தனை சீட் கேட்பீர்கள் என்ற கேள்விக்கு, உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஒத்த கருத்தோடு வெளிவரும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை கடுமையான முறையில் பெய்து வருகிறது கடந்த நாட்களாக பல மாவட்டங்களில் பல நகரங்களில் பெய்த மழையின் காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் மழைக்கு ஏற்றவாறு அரசு தங்களின் துறை சார்பில் மக்களை பாதுகாக்கும் வகையில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் விவசாயிகளின் பாதிப்பை குறையும் நிலையை ஏற்படுத்தும் அவசர நிலையை சம்பந்தப்பட்ட துறை மேற்கொள்ள வேண்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரண மூலமாக துணை நிற்க வேண்டும்
Next Story

