ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் பாரம்பரிய மிக்க வினோத திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கறி விருந்து அருந்தினர்

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் பாரம்பரிய மிக்க வினோத திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கறி விருந்து அருந்தினர்
X
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் பாரம்பரிய மிக்க வினோத திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் தரையில் அமர்ந்து சுடச்சுட பறிமாறப்பட்ட அன்னதான கறிவிருந்தில் பசியாறி மகிழ்ந்தனர்.
நரிக்குடி அருகே மறையூர் ஸ்ரீ மாசாணம் சுவாமி கோயிலில் ஆண்டாண்டு காலமாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் பாரம்பரிய மிக்க வினோத திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் தரையில் அமர்ந்து சுடச்சுட பறிமாறப்பட்ட அன்னதான கறிவிருந்தில் பசியாறி மகிழ்ந்தனர். விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மறையூர் கிராமத்தில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் அருள்மிகு.ஸ்ரீ மாசாணம் சுவாமி திருக்கோயில் வைகாசிப் பொங்கல் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கிருதுமால் ஆற்றங்கரையில் பனைமர கூட்டங்களுக்கு நடுவே பீடமாக காட்சியளித்து அருள் பாலித்து வரும் அருள்மிகு.ஸ்ரீ மாசாணம் சுவாமி திருக்கோயில் வைகாசிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு நேற்றிரவு பூக்கள் , எலுமிச்சை பழம் மாலை அலங்காரத்துடன் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக மறையூர் ஸ்ரீ மந்தையம்மன் கோயில் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ மாசாணம்,ஸ்ரீ அரியசாமி,ஸ்ரீ வீரபத்திர சுவாமிகள் கோயில் ஆலயத்தை வந்தடைந்தனர்.பின்னர் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்நிலையில் கோயில் ஆலயத்தில் நேற்று நள்ளிரவு முக்கிய நிகழ்வான எரிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சுமார் 100 க்கும் மேற்பட்ட கிடாய்கள் மற்றும் 150 க்கும் மேற்பட்ட சேவல்களை சுவாமிக்கு பலியிட்டு உணவாக சமைக்கப்பட்டு கோயில் ஆலய வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் அன்னதான நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு சுடச்சுட அன்னதான கறிவிருந்து பரிமாறப்பட்டது. ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் இந்த வினோத திருவிழாவில் தரிசனம் செய்யவும், அன்னதான கறிவிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் பெண்களுக்கு அறவே அனுமதியில்லை என்பது காலங்காலமாக தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருவது மரபு. இன்று அதிகாலை 5 மணி முதலே தொடங்கிய இந்த அன்னதான கறிவிருந்து நிகழ்ச்சி சில மணி நேரத்தில் நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள எஞ்சிய சாதம் உள்பட எதையும் கோயில் எல்லைக்கு அப்பால் கொண்டு செல்ல அனுமதியில்லை.ஆகவே எஞ்சிய உணவையும் ,ஆட்டுத்தலை, குடல், கால் ,கறி, தோல், அனைத்தும் ஏற்கனவே தோண்டப்பட்ட பெரிய பள்ளத்தில் போட்டு மூடி புதைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது மிகவும் வினோதமானது. இந்த திருவிழாவில் சென்னை, மதுரை,விருதுநகர், சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் மிகப்பெரிய நீண்ட வரிசையில் தரையில் அமர்ந்து அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த கறிவிருந்து அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பக்தர்கள் பசியாறினர்.ஆண்டாண்டு காலமாக பல்வேறு சிறப்புகளுடன் தொன்று தொட்டு நடந்து வரும் மறையூர் அருள்மிகு.ஸ்ரீ மாசாணம் சுவாமியை மனமுருகி வேண்டினால் கேட்ட வரம் கிடைப்பதும்,அன்னதான கறிவிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பசியாறுவது தங்களின் வாழ்நாள் பாக்கியம் எனபக்தர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் சன்னதியில் நின்று ஸ்ரீ மாசாணம் சுவாமியை மனமுருகி வேண்டினால் கேட்ட வரம் கிடைக்கும்,வாழ்வில் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.பின்னர் பக்தர்கள் பயபக்தியுடன் சுவாமியை தரிசனம் செய்து திருவருள் பெற்று சென்றனர்.
Next Story