உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்
X
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்
விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர், அரசு அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்து வருகின்றனர். அதன்படி, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் முகாமானது இன்று 28.05.2025 காலை 09.00 மணி முதல் மறுநாள் 29.05.2025 அன்று காலை 09.00 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் முதல் நாளான இன்று, மாவட்ட ஆட்சித்தலைவர், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், கோட்டையூர் ஊராட்சியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தினை பார்வையிட்டு, அங்குள்ள பதிவேடுகள் மற்றும் கோப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். மேலும், மகாராஜபுரம் ஊராட்சி தானிப்பாறை லிங்கம் கோவில் அருகில் புதிதாக பாலம் கட்டப்படவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். பின்னர், இலவச வீட்டுமனை பட்டா 6 பயனாளிகளுக்கும், நத்தம் பட்டா மாறுதல் 31 பயனாளிகளுக்கும், சமூக பாதுகாப்பு திட்டம் உதவித்தொகை 9 பயனாளிகளுக்கும், புதிய குடும்ப மின்னணு அட்டை 40 பயனாளிகளுக்கும், பிறப்பு சான்று பதிவு 4 பயனாளிகளுக்கும் என மொத்தம் 90 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும், அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
Next Story