தனியார் பள்ளி அருகில் குப்பை கெட்டுவதால் துர்நாற்றம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையில் தனியார் பள்ளி எதிரே ஊராட்சி பகுதி குப்பைக் கழிவுகளைக் கொட்டி வருவதால், அந்த பகுதி மக்கள், கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தனியார் பள்ளியின் பிரதான நுழைவாயில் அருகில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் அந்தப் பகுதி முழுவதும் துற்நாற்றம் வீசுகிறது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும். அப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க எச்சரிக்கை பலகைவைக்க வேண்டும் என்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு உள்ளது
Next Story

