குமரி : லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது

X
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் தாலுகா வியன்னூர் அஞ்சல் ஏற்ற கோடு மணலித்தறவிளையை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் மகன் சுபின். இவர் புதிய வீடு ஒன்றை கட்டுவதற்காக கட்டட வரைபட அனுமதி கேட்டு ஆற்றூர் பேரூராட்சி அலுவலகத்தை அணுகியுள்ளார். ஆற்றூர் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் முருகன் என்பவர் தானே செயல் அலுவலர் என நடித்து கட்டட வரைபட அனுமதி வழங்க கடந்த 26 ஆம் தேதி ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுபின் கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு பிரிவினர் ஐந்தாயிரம் ரூபாய் ரசாயனம் பூசிய பணத்தை சுபினிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர். ரசாயனம் தடவிய ஐந்தாயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை ஆற்றூர் பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து நேற்று மாலை செயல் அலுவலராக நடித்த பில் கலெக்டர் முருகனிடம் கொடுத்த போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சால்வன்துரை தலைமையிலான போலீசார் பாய்ந்து சென்று பிடித்தனர். சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

