ஊத்தங்கரை:மது போதையில் தகராறு ஒருவர் கைது.

ஊத்தங்கரை:மது போதையில் தகராறு ஒருவர் கைது.
X
ஊத்தங்கரை:மது போதையில் தகராறு ஒருவர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அம்பேத்கர் நகரின் பின்புறம் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையில் பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிருபாகரன் (40), இதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (25) ஆகிய இருவருக்கு இடையில் மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ் அருகிலிருந்த மதுபாட்டிலை எடுத்து உடைத்து கிருபாகரனை குத்தியதா கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை போலீசார். வழக்குப் பதிவு செய்து சதீஷை கைது செய்து ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சதீஷ் மீது ஏற்கனவே அடிதடி, வழிப்பறி வழக்கு உள்பட ஆறு குற்றவழக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
Next Story