ஓசூர்: பேருந்தில் குட்கா கடத்தியவர் கைது.

ஓசூர்: பேருந்தில் குட்கா கடத்தியவர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த தனியார் டிராவல்ஸ் பேருந்தை போலீசார் சோதனையிட்ட போது பேருந்தில் 24 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதை கடத்தியதாக திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த அப்பாதுரை (58) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story