நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதிஇருவர் படுகாயம்

X
Komarapalayam King 24x7 |28 May 2025 9:08 PM ISTகுமாரபாளையத்தில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி இருவர் படுகாயமடைந்தனர்
. குமாரபாளையம் எதிர்மேடு பகுதியில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன், 29, லேத் கூலி. இவர் நேற்றுமுன்தினம் இரவு 08:15 மணியளவில், சேலம் கோவை புறவழிச்சாலை, ஜே..கே.கே.முனிராஜா கல்லூரி அருகே சாலையை நடந்து கடந்தார். அப்போது டியூக் டூவீலரில் வந்த நபர், இவர் மீது மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். கோபாலகிருஷ்ணன் ஈரோடு தனியார் மருத்துவமனையிலும், விபத்துக்கு காரணமான டியூக் டூவீலர் ஓட்டுனர், கோவை, தனியார் கல்லூரி, பி.டெக், மூன்றாம் ஆண்டு மாணவர் நவீன், 22, கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
