உலக பட்டினி தினத்தையொட்டி விஜய் கட்சியினர் அன்னதானம்

X
Komarapalayam King 24x7 |28 May 2025 9:10 PM ISTகுமாரபாளையத்தில் உலக பட்டினி தினத்தையொட்டி விஜய் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
குமாரபாளையத்தில் உலக பட்டினி தினத்தையொட்டி விஜய் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நடிகர் விஜய் கட்சியான, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா, நகர செயலரான சக்திவேல் தலைமையில் நடந்தது. பஸ் ஸ்டாண்ட் மற்றும் கவுரி தியேட்டர் அருகில் ஆகிய இடங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இது பற்றி சக்திவேல் கூறியதாவது: தமிழக வெற்றிக்கழகம் கட்சி நிறுவனர் விஜய் ஆணைப்படி, கட்சியின் பொதுச் செயலர் ஆனந்த் ஆலோசனைப்படி, உலக பட்டினி தினத்தையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானம் பெற்ற பொதுமக்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். தேர்தல் சமயத்தில் தலைவர் சொற்படி பணியாற்றி, தலைவருக்கு வெற்றியை தேடி தருவோம். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சாந்தி, நகர பொருளர் சோமு, வார்டு செயலர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
