உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மின்கம்பத்தில் சாய்ந்த மரத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு................

சுமார் ஒரு மணி நேரமாக போராடி மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்த தீயணைப்பு துறையினர்...
உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மின்கம்பத்தில் சாய்ந்த மரத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.................... சுமார் ஒரு மணி நேரமாக போராடி மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்த தீயணைப்பு துறையினர்... நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. காற்றின் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதலே உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டாலும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன. இதனை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறை தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தேனோடு கம்பை செல்லும் சாலையில் அமைந்துள்ள நியூ ஹேரா பகுதியில் இன்று வீசிய பலத்த காற்றின் காரணமாக மரம் ஒன்று வேரோடு மின் கம்பியில் சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரமாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரமாக போராடி மின்கம்பத்தில் சிக்கி இருந்த மரத்தை வெட்டி அகற்றியதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.
Next Story