நீலகிரி மாவட்ட திமுக உதகை – கூடலூர் – குன்னூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம்.

X
நீலகிரி மாவட்ட திமுக உதகை – கூடலூர் – குன்னூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம். ஆ.இரசா எம்.பி., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி அவர்கள் பங்கேற்பு. நீலகிரி மாவட்ட திமுக., உதகை – கூடலூர் – குன்னூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் கூட்டம் உதகை ஜெம் பார்க் கூட்ட அரங்கில் கழக துணை பொதுச்செயலாளர் – நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ.இராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அனைவரையும் வரவேற்றார். மண்டல பொறுப்பாளர் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கலந்துக்கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக், தேர்தல் பணி செயலாளர் – அரசு தலைமை கொறடா மாண்புமிகு கா.ராமசந்திரன், சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் பரமேஷ்குமார், தென்றல் செல்வராஜ், திராவிடமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி வாரியாக நடைபெற்ற சந்திப்பில், எதிர்வரும் 2026 தேர்தலில் நீலகிரி மாவட்டத்திலுள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார், லட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், திராவிடமணி, காசிலிங்கம், செந்தில் ரங்கராஜ், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா நகர கழக செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி, சேகரன், இளஞ்செழியன், ஒன்றிய கழக செயலாளர்கள் லியாகத்அலி, பரமசிவன், லாரன்ஸ், நெல்லை கண்ணன், காமராஜ், பிரேம்குமார், பீமன், சிவானந்தராஜா, சுஜேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, பில்லன், தொரை, மோகன்குமார், வீரபத்திரன், செல்வம், ராஜேந்திரன், உதயதேவன், அமிர்தலிங்கம், காளிதாசன், பேரூர் கழக செயலாளர்கள் பிரகாஷ்குமார், சதீஷ்குமார், நடராஜன், சுந்தர்ராஜ், முத்து, காளிதாஸ், ரமேஷ்குமார், சஞ்சீவ்குமார், உதயகுமார், சின்னவர், சுப்ரமணி, மார்டின், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் சசிகுமார், கோமதி, ராஜா, எல்கில் ரவி, காந்தல் ரவி, சீனி, ஆலன், ராம்குமார், ஜெயந்தி, ரஹமத்துல்லா, வெங்கடேஷ், ஆல்வின், உமாநாத், ஜெயகுமார், அன்வர் அப்துல்லா, சுரேஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாபு, நாகராஜ், பத்மநாபன், முரளிதரன் நகராட்சி தலைவர்கள் வாணீஸ்வரி, சுசிலா, பரிமளா, சிவகாமி, பேரூராட்சி தலைவர்கள் கலியமூர்த்தி, ஜெயகுமாரி, கௌரி, சத்யவாணி, சித்ராதேவி, ஹேமாமாலினி, வள்ளி, ராதா, பேபி, பங்கஜம், தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜெயராமன் உட்பட கழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
Next Story

