ரெட் அலர்ட் எதிரொலி

ரெட் அலர்ட் எதிரொலி
X
வெள்ள அபாயம் எச்சரிக்கை நடவடிக்கை
கூடலூரில் கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ள அபாயமுள்ள இருவயல் ஆற்றுப்படுகையையும், அந்தப் பகுதியிலுள்ள தாழ்நிலப் பகுதியையும் ஆ.இராசாநேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து ஏற்படும் வெள்ள அபாயம் குறித்தும், நிா்வாகம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, மழையால் பாதிக்கப்பட்டு புத்தூா்வயல் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ஸ்ரீமதுரை ஊராட்சி, வடவயல் பழங்குடி கிராமத்தைச் சோ்ந்த மக்களை சந்தித்து நிவாரணப் பொருள்கள் மற்றும் உதவிகளை ஆ.இராசா வழங்கினாா். அரசு கொறடா கா.ராமசந்திரன், மாவட்ட கூடுதல் ஆட்சியா் கௌசிக், சாா் ஆட்சியா் சங்கீதா, நகராட்சி ஆணையா் சுவாதாஸ்ரீ, மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு, நகா்மன்றத் தலைவா் பரிமளா, நீலகரி மாவட்ட திமுக செயலாளா் ராஜூ, முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, கூடலூா் நகர திமுக செயலாளா் இளஞ்செழியன், ஒன்றிய செயலாளா் லியாகத் அலி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Next Story