கோவை: சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் அதிரடி சோதனை

கோவை: சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் அதிரடி சோதனை
X
கோவை கந்தே கவுண்டன் சாவடி மற்றும் பொள்ளாச்சி கோபாலபுரம் ஆகிய இரு போக்குவரத்துத் துறை (RTO) சோதனைச் சாவடிகளில் நேற்று லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
கோவை கந்தே கவுண்டன் சாவடி மற்றும் பொள்ளாச்சி கோபாலபுரம் ஆகிய இரு போக்குவரத்துத் துறை (RTO) சோதனைச் சாவடிகளில் நேற்று லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத மொத்தம் ரூ. 2,13,640 பறிமுதல் செய்யப்பட்டு, அங்கு பணியில் இருந்த நான்கு ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. கந்தே கவுண்டன் சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 1,47,560 பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ரூ. 1 லட்சம் சேமிப்பு அறையில் இருந்த பிரிண்டருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மேஜைகளில் ரூ. 17,060 மற்றும் அங்கு இருந்த ரேக்குகளில் ரூ. 30,500 கணக்கில் வராத பணம் இருந்தது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கு பணியில் இருந்த சதீஷ் ஜெயச்சந்திரன் மற்றும் உதவியாளர் லோகநாதன் ஆகிய இருவரிடம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், பொள்ளாச்சி கோபாலபுரம் சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 66,080 பறிமுதல் செய்யப்பட்டது. அங்கு பணியில் இருந்த தமிழ்ச்செல்வி மற்றும் சிவகுரு ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Next Story