கராத்தே போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிகள்
அகில உலக கராத்தே சங்கம் சர்வதேச அளவில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவரில், இலங்கை, பர்மா மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, துபாய், ஆகிய நாடுகளிலிருந்து கராத்தே போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தனர். கடந்த 17 5 2025 அன்று நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் அழகர் கோவில் பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஜீவிதா இரண்டு பிரிவுகளில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒரு பிரிவில் தங்கப்பதக்கம் ஒரு பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார். மேற்காணும் இரண்டு மாணவிகளும் அருள்மிகு சுந்தரராசா உயர்நிலைப் பள்ளியில் தற்போது படித்துக் கொண்டிருக்க கூடிய மாணவிகள். அழகர் கோவிலுக்கு மிக அருகில் உள்ள கோணவராயன் பட்டியை சேர்ந்த கிராமத்திலிருந்து வரக்கூடிய மாணவிகள். மேற்கணும் இருவரும் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த மாணவிகளை உருவாக்கிய தலைமை ஆசிரியர் செல்வராஜ் அவர்களுக்கும் பயிற்சி வழங்கி உதவியாக இருந்த ஆசிரியர்களுக்கும் பள்ளியின் செயலரும் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் துணை ஆணையருமான யக்ஞ நாராயணன் அவர்கள் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக பாராட்டி நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்கள். அவர்களுடன் அலுவலக கண்காணிப்பாளர் பாலமுருகன் அவர்களும் உடன் இருந்தார்.
Next Story





