காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லம்மாபட்டியில் காளியம்மன் கோயிலில் திருப்பணிகள் முடிந்து நேற்று (மே.28) கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த மே 26 ல், கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நேற்று காலை யாகசாலை பூஜைகள் முடிந்த பிறகு, புனிதநீர் அடங்கிய கடம் புறப்பாடாகி கோபுர கும்பத்திற்கு கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அதனை தொடர்ந்து காளியம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடந்தது. அய்யப்பன் எம்எல்ஏ, ஜமீன்தார் பாண்டியன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அன்ன தானம் வழங்கப்பட்டது
Next Story



