சேலம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில்

சேலம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில்
X
இளம்பிள்ளையில் பொதுமக்களுக்கு அன்னதானம்
சேலம் வடமேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உலக பட்டினி தினத்தையொட்டி ஏழை, எளிய, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இளம்பிள்ளை பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில் வடமேற்கு மாவட்ட செயலாளர் கே.செந்தில்குமார், தலைமை தாங்கி பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சேலம் வடமேற்கு மாவட்ட நிர்வாகிகள் பெருமாள், கேசவன், செந்தில், செ.பாலமுருகன், விக்னேஷ், மணி ராகுல், தமிழரசன், சத்யா மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இடங்கணசாலை நகர தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story