கல்மேல்குப்பம் அருகே வீடு தீ பற்றி எரிந்து நாசம்!

X
ராணிப்பேட்டை மாவட்டம் கல்மேல் குப்பம் அருகே எருக்கன் தொட்டி பகுதியைச் சேர்ந்தவர் மேகலா இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்று இருந்தார். மாலை திடீரென அவரது வீடு தீப்பற்றி எரிந்தது, அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வீரர்கள் மேலும் தீ பரவாமல் தண்ணீரை பீச்சு அடித்து தீயை அணைத்தனர் ஆனாலும் வீட்டில் இருந்த துணிமணிகள் வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
Next Story

