கரூர் மாரியம்மன் வைகாசி பெருந்திருவிழா நிறைவு நாளில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சுவாமி தரிசனம்.
கரூர் மாரியம்மன் வைகாசி பெருந்திருவிழா நிறைவு நாளில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சுவாமி தரிசனம். கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு வைகாசி மாத திருவிழா கடந்த 11ம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அமராவதி ஆற்றில் கம்பத்திற்கு வேப்பிலை, பூக்கள் உள்ளிட்டவற்றை கட்டி பூஜை செய்து, அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து, கோயிலில் நட்டு வைக்கப்பட்டது. தினமும் பக்தர்கள் பால்குடம் மற்றும் புனித நீர் எடுத்து வந்து கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், தேரோட்டமும் நடந்தது. கடந்த 26, 27 ஆம் தேதி பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் நேற்று விழா நிறைவு நாளில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலின் சார்பில் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு மலர் மாலை அணிவித்து சாமி படம் வழங்கி கௌரவித்தனர், கட்சி நிர்வாகிகள் சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story






