தஞ்சையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

X
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை 30ம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டஅரங்கில் நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் பிரியங்கா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாளை 30ம் தேதி நடக்கும் விவசாயி கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங் கள் அளிக்கப்பட உள்ளது. மேலும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தமிர்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவ சாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனை வரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்ப டுகிறது. விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக் களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்ற பின்பு மனுக்களை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

