மதுரை மேயரின் கணவர் தற்காலிகமாக திமுகவிலிருந்து நீக்கம்

மதுரை மேயரின் கணவர் தற்காலிகமாக திமுகவிலிருந்து நீக்கம்
X
மதுரை மேயரின் கணவர் பொன் வசந்த் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
மதுரை மேயரின் கணவர் பொன்வசந்த் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது மனைவியின் அலுவலக விஷயங்களில் தலையீடு இல்லாமலும், அவரோடு அலுவலக விழாக்களிலோ கலந்து கொள்வது கிடையாது. எனினும் அவர் ஏன் நீக்கப்பட்டார் என தெரியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்த அதே நாளில் மதுரை மாநகராட்சி கவுன்சில் கூட்டமும் நடைபெற்றது. திமுக கவுன்சிலர்கள் அனைவரும் கட்சிக் கூட்டத்திற்கு சென்றதால் மாநகராட்சி தீர்மானங்கள் அதிமுக கவுன்சிலர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதற்கு பொன்வசந்தின் முயற்சி தான் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உதவியால் தான் இந்திராணி பொன் வசந்த் மேயர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் கட்டுப்பாட்டில் மேயர் இருப்பதாக பேசப்பட்டது. மதுரையில் திமுக பொதுக்குழு நடக்க ஜுன் 1ம் தேதி நடலபெறவுள்ள நிலையில் மேயரின் கணவர் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது திமுகவினர் மத்தியில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது
Next Story