புத்தகத் திருவிழா அழைப்பிதழ் வீரக்குமார சுவாமி கோவிலில் பூஜை

X
வெள்ளக்கோவில் புத்தகத் திருவிழா பணிகள் தொடங்கப்பட்டது. புத்தக திருவிழா ஜூலை 10ம் தொடங்க உள்ளது.இந்த விழாவின் அழைப்பிதழ், காக்கும் கடவுள் வீரக்குமாரசுவாமி கோவில் சுவாமிக்கு வைத்து பூஜை செய்யப்பட்டு, அதன் பிறகு “முதல் அழைப்பு” எனும் பாரம்பரிய நிகழ்வாக வெளியிடப்பட்டது. தமிழர் பண்பாட்டில், கடவுளின் அருளோடு நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பது நல்ல தொடக்கம் என நம்பப்படுகிறது. இதை ஒட்டி, கோவில் வளாகத்தில் நடைபெற்ற பூஜைச் சடங்குகள், விழாவின் சிறப்பை மேலும் உயர்த்தின என்கின்றனர். இந்த நிகழ்வில் அறக்கட்டளை தலைவர் பொருளாளர் மற்றும் இணைச் செயலாளர்கள் மற்றும் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
Next Story

