மகன் மாயம். தாய் புகார்

X
மதுரை மாவட்டம் மண்ணாடிமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் முத்து காமாட்சியின் மகன் காமாட்சி( 39) என்பவர் பெயிண்டராக உள்ளார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவருக்கும் இவருடைய மனைவிக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த ஒரு மாதமாக தனது தாயுடன் காமாட்சி இருந்து வந்துள்ளார். இவர் கடந்த 25ஆம் தேதி காலை 9 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று (மே.28) அவரது தாய் பரமேஸ்வரி காடுபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காண நபரை தேடி வருகிறார்கள்.
Next Story

