அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு ஆசிரியர்களிடம் சரமாரி கேள்வி

திருத்தணி அரசு பள்ளியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரதாப் 10,11,12, பொது தேர்வு வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தேர்ச்சி விகிதம் ஏன் குறைந்து போனது தமிழ் பாடத்தில் கூட இப்படி தேர்ச்சி விகிதம் இல்லையா? என்று ஆசிரியர்களை சரமாரி கேள்வி?
திருத்தணி அரசு பள்ளியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரதாப் 10,11,12, பொது தேர்வு வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தேர்ச்சி விகிதம் ஏன் குறைந்து போனது தமிழ் பாடத்தில் கூட இப்படி தேர்ச்சி விகிதம் இல்லையா? என்று ஆசிரியர்களை சரமாரி கேள்வி? கேட்டு தலைமை ஆசிரியர் உங்களுக்கு இந்த பள்ளியில் இப்படி தேர்ச்சி விகிதம் இல்லாமல் இருப்பதற்கு அசிங்கமாக இல்லையா? உங்களை ஏன்? பணியிடம் நீக்கம் செய்யக்கூடாது ஒரு மாணவர் சமுதாயத்தை நீங்கள் அனைவரும் அழித்து விட்டீர்கள் என்று ஆசிரியர்களை கடுமையாக சாடினார் மாவட்ட ஆட்சியர்..... திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவில் தமிழக அரசின் திட்டமான உங்கள் ஊரில் உங்களைத் தேடி என்ற அரசு திட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் திருத்தணி நகராட்சியில் காந்தி சாலையில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வுக்கு வந்திருந்தார் அப்போது இந்தப் பள்ளியில் 10,11,12, ஆம் வகுப்புகளில் பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்று இருந்தது இதனை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஏன் மாணவர்கள் குறைவாக வந்துள்ளனர் ஏன் ஆசிரியர்கள் குறைவாக உள்ளனர் என்று இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணனை பார்த்து வினா எழுப்பினார் மேலும் இந்த பள்ளியில் தமிழ் பாடம் மற்றும் மேத்தமேடிக்ஸ் என்று அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக உள்ளது என்ன பாடம் சொல்லிக் கொடுக்கிறீர்கள் எங்கே ஆசிரியர்கள் எங்கே மாணவர்களை மாணவர்கள் பெற்றோர்களை சந்தித்து காரணம் கேட்டீர்களா என்று பல கேள்விகளை ஆசிரியர்களை பார்த்து மற்றும் தலைமை ஆசிரியரைப் பார்த்து மாவட்ட ஆட்சியர் வினய் எழுப்பினார் அப்போது அனைத்து ஆசிரியர்களும் பதில் கூற முடியாமல் வாய் அடைத்து போய் அமைதியாக நின்றனர் ஏன் இப்படி தேர்ச்சி விகிதம் குறைந்து உள்ளது என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியத்தையும் கடுமையாக சாடினார் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்து சென்று ஆசிரியர்களையும், பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் இந்த பள்ளியில் தேர்ச்சி விகிதம் குறைந்து போனதற்கு என்ன காரணம் என்று கேட்டால் உங்களுக்கு கூற முடியவில்லை புள்ளி விவரம் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் என்று எந்த ஒரு பட்டியலும் தங்களிடம் இல்லை பள்ளியில் மாணவர்களை தேர்ச்சி விகிதம் செய்ய எந்த ஒரு முயற்சியும் நீங்கள் செய்யவில்லை ஆறு ஆண்டுகளாக இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்ளீர்கள் உங்களை ஏன் பணியிடம் நீக்கம் செய்யக்கூடாது இந்த பள்ளியில் இருந்து உங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று காட்டமாக பள்ளியின் தலைமை ஆசிரியரை பாலசுப்பிரமணியம் இவரை சாடினார் ஆட்சியர் பிரதாப் இதனைத் தொடர்ந்து இந்த பள்ளியில் உள்ள மேத்தமேடிக்ஸ் ஆசிரியர் தமிழ் ஆசிரியர்கள் ஆகியோர்களையும் தேர்ச்சி விகிதம் குறைந்து போனதற்கு நீங்களும் அனைவரும் காரணம் என்று கடுமையாக மாவட்ட ஆட்சியர் சாடினார் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து இதுபோல் உள்ளதை ஏன் நீங்கள் மேம்படுத்துவதற்கான எந்த ஒரு கட்டமைப்பு நடவடிக்கைகளையும் தேர்ச்சி விகித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளையும் கடுமையாக மாவட்ட ஆட்சியர் திட்டினார் மேலும் இந்த பள்ளியில் தேர்ச்சி விகிதம் இல்லாமல் போன அனைத்திற்கும் இந்த மாணவர் சமுதாயத்தை சீரழித்து விட்டீர்கள் என்று காட்டமாக ஆசிரியர்கள் அனைவரையும் ஆட்சியர் பிரதாப் ஆவேசமாக திட்டி தீர்த்தார்... இதனைத் தொடர்ந்து திருத்தணி நகராட்சியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் 11, வகுப்பு புதிய சேர்க்கைக்கு நடைபெறும் பகுதிக்குச் சென்றார் அப்போது வரிசையில் காத்திருந்த ஒரு மாணவியின் தாயார் மாவட்ட ஆட்சியரிடம் இந்தப் பள்ளியில் ரூபாய் 50 அப்ளிகேஷன் வாங்குவதற்கு கேட்கிறார்கள் ஏழைகள் நாங்கள் என்ன செய்வது இதனை கொடுத்தாலும் இந்த பள்ளியில் அப்ளிகேஷன் படிக்காத பெற்றோர்களுக்கு அப்ளிகேஷனை எழுதிக் கொடுப்பதற்கு தருவதற்கு ஆள் இல்லை மேலும் ஸ்டாப்ளர் பின், கம் போன்றவை இந்தப் பள்ளியில் தர மறுக்கிறார்கள் நாங்கள் அலைவதாக இருக்கிறது அரசு பள்ளி இப்படி எங்களை இந்த ஆசிரியர்கள் ரூபாய் ஐம்பதை வாங்கிக் கொண்டு எந்த ஒரு ரசீதையும் கொடுப்பதில்லை இதனால் இது உன் மூலம் பெரிய ஊழல் இந்த பள்ளியில் நடைபெறுகிறது இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும் உள்ளது இந்தப் பள்ளியில் குடிதண்ணீர் வசதி இல்லை கழிப்பறை வசதியும் இல்லை என்று மாவட்ட ஆட்சியரை பார்த்து நேருக்கு நேராக பெற்றோர்கள் வைத்த கேள்வி? திகைத்துப் போன மாவட்ட ஆட்சியர் மாணவர்களிடம் ரூ.50 அப்ளிகேஷன் கட்டணம் வாங்கப்படுவதை கேட்டு உறுதி செய்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் மேலும் பள்ளியில் கழிப்பறை குடிதண்ணீர் வசதி ஏன் செய்து கொடுக்கவில்லை என்று தலைமை ஆசிரியரையும் திருத்தணி நகராட்சி ஆணையரையும் அழைத்து சாடினார் உடனடியாக பள்ளி திறப்பதற்கு முன்பு இவை அனைத்தையும் இந்த பள்ளியில் சரி செய்து தர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டார் மேலும் இந்தப் பள்ளியில் கட்டட பணிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது பொதுப்பணி துறை அதிகாரி மூலமாக திருவள்ளூர் மாவட்ட திமுக நெசவாளர் அணி சேர்ந்த ரவி என்பவர் அரசு ஒப்பந்ததாரர் என்ற போர்வையில் இந்த ஆய்வு நிகழ்ச்சியில் ஆசிரியர்களுடன் பள்ளி மாணவிகளிடம் ஆட்சியர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் பொழுது உடன் வந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டு இருந்த திமுகவை சேர்ந்த நிர்வாகி ரவி என்பவர் உடன் இருந்ததால் இவரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அழைத்து வந்ததால் இந்த ஆய்வு நிகழ்ச்சிக்கு எதற்காக திமுகவினர் என்று சர்ச்சை எழுந்துள்ளது....
Next Story