தரம் இல்லாத தார் சாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆர்.கே.பேட்டை ஒன்றியம் - அம்மனேரி, கொண்டாபுரம், வெள்ளாத்தூர், 3- கிலோமீட்டர் தூரத்திற்கு பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் ரூபாய் 2.18 கோடி மதிப்பீட்டில் போடப்பட்ட தார் சாலை ஐந்து நாட்களில் தரம் இல்லாத சாலையாக போட்டதால் குழந்தைகள் தார் சாலையை பிரித்து விளையாடும் சாலையாக மாறியது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம் - அம்மனேரி, கொண்டாபுரம், வெள்ளாத்தூர், 3- கிலோமீட்டர் தூரத்திற்கு பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் ரூபாய் 2.18 கோடி மதிப்பீட்டில் போடப்பட்ட தார் சாலை ஐந்து நாட்களில் தரம் இல்லாத சாலையாக போட்டதால் குழந்தைகள் தார் சாலையை பிரித்து விளையாடும் சாலையாக மாறியது சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ அதிகாரிகள் ஊழல் செய்துள்ளதாக வீடியோ எடுத்து பொதுமக்கள் புகார்.... திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மனேரி, கொண்டாபுரம், வெள்ளாத்தூர், கிராமத்தில் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் ரூபாய் 2.18 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைப்பதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டு ஆர். கே.பேட்டை வட்டார வளர்ச்சித்துறை ஒன்றிய பொறியாளர் மேற்பார்வையில் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஒப்பந்தம் வழங்கி உள்ளனர் இந்த ஒப்பந்தத்தை ஒப்பந்ததாரர் வி.கண்ணாயிரம் ஆர்.கே.பேட்டையை சேர்ந்த என்பவர் ஒப்பந்த பணியை தார் சாலை பணியை எடுத்துள்ளார் மேற்கண்ட அந்த கிராமத்திற்கு இவர் 15 நாட்களாக தார் சாலை பணியை போட்டு ஐந்து நாட்களுக்கு முன்பு தார் சாலை பணியை முடித்துள்ளார் இந்த தார் சாலை போடும்பொழுது ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள், ஒன்றிய பொறியாளர்கள், யாரும் இதில் எட்டிக் கூட பார்க்கவில்லை என்று கூடுதல் புகாரை கிராம மக்கள் முன் வைத்துள்ளனர் இதன் காரணமாக தரம் இல்லாத சாலை போட்டதாக இந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன் வைத்தனர் இந்த தார் சாலை கைகளால் பிரித்து எடுக்கும் அளவிற்கு அதுவும் குழந்தைகள் தார் சாலையைப் பிரித்து எடுத்து மன்போல் ஜல்லிகளை தார் சாலை ஜல்களை குவித்து விளையாடும் காட்சிகளை அந்த பகுதி கிராம மக்கள் வீடியோவாக எடுத்து அதிகாரிகள் ஊழல் செய்துள்ளதாக தரமான சாலை போடவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்து வீடியோவை வைரலாக்கி உள்ளனர் இந்த பகுதி மக்கள் தங்களுக்கு சாலை மத்திய அரசு திட்டத்தில் போடப்பட்டதில் அதிகாரிகள் ஊழல் செய்து ஒப்பந்ததாரர் மூலம் பெரிய ஊழல் செய்து தரம் இல்லாத சாலை போட்டு எங்கள் கிராமத்தை ஏமாற்றி உள்ளனர் என்று குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர் கிராம மக்கள் மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் போடப்படும் சாலைகள் அனைத்தும் தரமானதாக உள்ளதா என்று கேள்வி எழுப்பி இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது... சம்பந்தப்பட்ட ஆர். கே. பேட்டை வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் அனைவரும் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுப்பாரா என்று இந்த பகுதி மக்கள் கேள்வி? எழுப்பி உள்ளனர்...
Next Story