குடவாசலில் மெடிக்கல் ஷாப்பில் போதை பொருட்கள் பறிமுதல்

X
திருவாரூர் மாவட்டம், குடவாசல் நகர் பகுதியில் அமைந்துள்ளது காவேரி மெடிக்கல் என்ற தனியார் மருந்து கடை. குடவாசல் பகுதியில் அமைந்துள்ள காவேரி மருந்து கடையில் வியாபாரமும் நாள்தோறும் கணிசமான அளவில் நடைபெற்று வரும். இந்த ஆங்கில மருந்து கடையின் உரிமையாளர் தமிமுன் அன்சாரி அரசு தடை விதித்த சட்டத்திற்கு புறம்பான cool lip, hans, vimal gudka உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தன்னுடைய மருந்தகத்தில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த குடவாசல் தாலுகா காவல்துறையினர் அவருடைய மருந்தகத்தில் சோதனை இட்ட பொழுது cool lip, hans, vimal gudka உள்ளிட்ட பல்வேறு அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதும் அவர் விற்பனை செய்வதும் தெரியவந்தது. உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடம் குடவாசல் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.எத்தனை நாட்களாக விற்பனை செய்து கொண்டிருந்தார் அவருக்கு இந்த போதை வஸ்துகள் எங்கிருந்து வருகின்றன என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவரிடம் இருந்து எவ்வளவு மதிப்பிலான போதை பொருட்கள் பிடிபட்டன என்பது குறித்தும் அளவீடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மெடிக்கல் ஷாப்பில் போதை வஸ்துகள் வைத்து விற்பனை செய்தது குடவாசல் பகுதியில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு நோய்களுக்கான மருந்து மாத்திரை உள்ளிட்ட பல்வேறு மருந்து பொருட்கள் இருக்கக்கூடிய கடையில் பல்வேறு நோய்களை உருவாக்கக்கூடிய போதை வஸ்துகளை வைத்து விற்பனை செய்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Next Story

