மன்னார்குடியில் ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்க கூட்டம் நடைபெற்றது

மன்னார்குடியில் ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்க கூட்டம் நடைபெற்றது
X
திருவாரூர் மாவட்டம் ஏஐடியுசிஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட குழு கூட்டம்
திருவாரூர் மாவட்டம் ஏஐடியுசிஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட குழு கூட்டம் தோழர் கே. மணி அவர்கள் தலைமையில் AITUC அலுவலகத்தில் மன்னார்குடியில் நடைபெற்றது கூட்டத்தில் ஏஐடியுசிமாவட்டச் செயலாளர் தோழர் ஆர் சந்திரசேகர் ஆசாத் ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் பி வி ரமேஷ் ஏஐடியுசி மாவட்ட துணை செயலாளர் தோழர் வி கலைச்செல்வன் ஆட்டோ சங்க மாவட்ட துணை செயலாளர் எஸ் எஸ் சரவணன் ஏஐடியுசி நகர தலைவர் என் தனி கோடி தோழர் வி.எம். கலியபெருமாள் சிபிஐ நகர செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனார் கூட்டத்தில் பஹால் காமில் 26 பேர் சுட்டு கொல்லப்பட்டார்கள் தென் சென்னை மாவட்ட ஆட்டோ சங்க நிர்வாகி விபத்தில் மரணித்தார் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. நகரம் மாவட்ட மாநாடு ஜூன் 15ம் தேதி நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது அமைப்பு நிலை பற்றியும் மாநில குழு எடுக்கும் முடிவுகளை நிறைவேற்றிடவும் முடிவு எடுக்கப்பட்டது. தீர்மானம் 1. மன்னார்குடி வட்டார போக்குவரத்து அலுவலகம் i ஆய்வாளர் அவர்கள் இரண்டு தினங்கம் மட்டும் வாகன ஆய்வு மேற்கொள்கிறார் ஆகையால் நிரந்தரமாக பணி அமர்த்த வேண்டும் அதனை தொடர்ந்து மன்னார்குடி திருவாரூர் திருத்துறைபூண்டி ஆகிய மூன்று நகரத்திற்கு ஒரே ஆய்வாளர் என்ற நிலை உள்ளது அரசு உடனடியாக தலையீட்டு அந்த அந்த பகுதிக்கு தனி நபர் ஆய்வாளர் பணி அமர்த்த வேண்டும் ... 2. மன்னார்குடி வட்டார போக்குவரத்து அலுவகத்தில் டெஸ்ட் டிரைவ் தளம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் வேலை நடைபெறுகிறது வேலையை விரைந்து முடித்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story