சேலம் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் அதிமுக எதிர்க்கட்சி தலைவரை

X
சேலம் மாநகராட்சியின் அவசர மற்றும் இயல்பு கூட்டம் மேயர் இராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் முறையாக தண்ணீர் வழங்க வேண்டும். 12 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்குவதால் பொதுமக்கள் அவதிப்படுவதாக பேசினர். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி யாதவமூர்த்தி பேசிய போது வார்டு கவுன்சிலர்களுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் பணிகள் தொடங்கி வைக்கப்படுகிறது. குறைந்த தொகைக்கு டெண்டர் கோரியவர்களுக்கு கொடுக்காமல் அதிக தொகை டென்டர் கோரிய அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர் கூச்சலிட்டனர். இதனால் திமுக அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே 45 வது வார்டு திமுக கவுன்சிலர் சுகாசினி எதிர்க்கட்சித் தலைவர் யாதவ் மூர்த்தியை கன்னத்தில் ஓங்கி அடித்தார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து திமுக அதிமுக கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. போலீசாரும் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினார். மேலும் திமுக கவுன்சிலர்கள் பிடித்து தள்ளினர். இதனால் மேலும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் யாதமூர்த்தியை கவுன்சிலர் சமாதானப்படுத்தினர். மேலும் திமுக கவுன்சில இருக்கேன் வெளியே அழைத்துச் சென்றனர்.
Next Story

