வாலிபர் தற்கொலை

வாலிபர்  தற்கொலை
X
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, ராஜா வீதியை சேர்ந்தவர் சாந்தி (50). அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.இவரது 3-வது மகன் சுரேஷ் (32). இவர், அவ்வப்போது கிடைக்கும் வேலைகளுக்கு சென்று கொண்டும், மது குடித்து கொண்டும் இருந்துள்ளார்.இந்த நிலையில், நேற்று முன் தினம் மாலை, சாந்தியின் மகள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டினுள் சுரேஷ் சேலையால் தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார்.அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை மீட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே சுரேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து, பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story