பள்ளப்பட்டியில் நிலத்தடி நீர் மஞ்சள் நிறமாக வருவதால் ஆணையரிடம் கோரிக்கை மனு.
பள்ளப்பட்டியில் நிலத்தடி நீர் மஞ்சள் நிறமாக வருவதால் ஆணையரிடம் கோரிக்கை மனு. கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி தெற்கு தெரு பகுதியில் நகராட்சி குப்பை கிடங்கு அமைந்துள்ளது. அப்பகுதி சுற்றிலும் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் பள்ளி,கல்லூரி, மசூதி உள்ளிட்டவைகள் அமைந்துள்ளது. மலை போல் குவிந்து கிடக்கும் குப்பையில் இருந்து அதிக துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மஞ்சள் நிறத்தில் நிலத்தடி நீர் வருவதால் பொதுமக்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு அதிக அளவு நோய் தொற்று ஏற்படுவதாகவும், தற்போது அமைய உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது, குப்பை கூடத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் எனக் கூறி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மஞ்சள் நிறத்தில் வரும் நிலத்தடி நீரை வாட்டர் பாட்டிலில் எடுத்து வந்து பள்ளப்பட்டி நகராட்சி ஆணையர் ஆர்த்தியிடம் காட்டி தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் உறுதி அளித்தார். மனுவின் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
Next Story





