ரோப்கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணி

ரோப்கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணி
X
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் ரோப்கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்பட்டு மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் முருகனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். சஷ்டி, கிருத்திகை, வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்தரம், செவ்வாய்க்கிழமை அதேபோல விடுமுறை, விஷேஷ நாட்கள், தொடர் விடுமுறை, பண்டிகை உள்ளிட்ட நாட்களில் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். பக்தர்கள் படிப்பாதை ,யானை பாதை ,மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு 45 நாட்களும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம், அதேபோல இன்று ஒரு நாள் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது, மேலும் ரோப்காரில் உள்ள சாப்ட்டுகள், பெட்டிகள்,கம்பி வடம் , உருளைகள் உள்ளிட்ட பணிகள் பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மீண்டும் நாளை வழக்கம்போல் ரோப் கார் சேவை இயங்கப்படும் எனவும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில் மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Next Story